Tuesday, August 24, 2010

கவிதை நடை

கவிதை நடை
நீ  நடந்துவரும்  அழகை 

 ஒரு  கவிதையாய் 
 
 சொல்வதற்குள்

நூறு  பாடல்களை  பாடிவிட்டது

உன் கால் கொலுசு ....
 
 
மின் அஞ்சல் வழியாக,,,,,, சுரேஷ்

Tuesday, August 17, 2010

உனக்காக

உனக்காக

எடுத்து
சூடிக்கொள்
உன்
நினைவுகளால்
பூத்து  கிடக்கும்
என்  மனதை ...
 
மின் அஞ்சல் வழியாக ...  செல்வா

அடடா

அடடா  
 
பூக்காமலும்
உதிராமலும் ...
அரும்பாக  மட்டுமே
அழகாக  
இருக்கிறதே  .!
உன்  
மௌன  உதடுகள் ...!
 
 
ரவி சந்திரன்,,மின் அஞ்சல் வழியாக
 

காதல் தோல்வி

காதல்  தோல்வி

என்னை  நீ
ஏமாற்றியது
உனக்கேன்னவோ
சாதாரணம்
 

என்  நெஞ்சிலோ
சதா "ரணம்"
 
மின் அஞ்சல் வழியாக, பெரிய சாமீ

கேள்வி

கேள்வி  
 
வாழ்கையில்  ஒரு  பாதி 
 கற்றலில் கழிந்தது !

மறு  பாதி 
 தேடலில்  கழியப்போகிறது !

மீதம்  எங்கே  இருக்கிறது  வாழ்வதற்கு ...?
 
ரபீக் ,புளியங்குடி மின் அஞ்சல் வழியாக

பாவ மன்னிப்பு

பாவ  மன்னிப்பு

நேற்று  என்  கைகளை  
முட்களால் ...
காயப்படுத்திய  ரோஜா
இன்று  
கண்ணீர்  விட்டு  
அழுகிறது ...!

பனித்துளியாய் !!
 
மின்  அஞ்சல் வழியாக ....கோபி ,சென்னை 

Wednesday, August 11, 2010

காதல் யாத்திரை

காதல் யாத்திரை
அவள் 
கொலுசு  சத்தத்தோடு
நடக்கும்  போது
சத்தமில்லாமல்  
கூடவே  
நடக்கிறது
..
..
என்  
காதல் ...
 
மின் அஞ்சல் வழியாக ,,,ரவி

Tuesday, August 10, 2010

உன்னுள் தொலைந்தேன்

உன்னுள் தொலைந்தேன்
எப்படியோ
தேடி  தேடி
கண்டுபிடித்துவிட்டேன்
என்னை ...!
 
மறுபடியும்
அவளிடம்
மட்டும்  
தொலைக்க ...
 
ரவி , மின் அஞ்சல் வழியாக

Wednesday, August 4, 2010

கண் மை

கண்  மை  
என்னை  கொல்வதற்கு
 உன்  விழிகள்
 ஒன்றே  போதுமே  
 
பின்  
அதில்  ஏன்  
விஷம்  வேறு  தடவுகிறாய்....?
 
முத்து,சாத்தான் குளம்
 

நில நடுக்கம்

நில  நடுக்கம்  
விண்ணை  நோக்கி
விதவிதமான
அடுக்கு  மாடி  வீடுகள் !
 
சுமை  தாங்காமல் 
சுளுக்கு  விழுந்தது 
 
பூமிக்கு .... 
 
சரவணன் மயிலாடுதுறை

ஆட்டம்

ஆட்டம்
வாலை ஓட்ட  அறுத்தும் 
 ஆட்டம்  போடுகிறது 
 வானத்தில்  
பட்டம்!
  
கமால், ராய பேட்டை

அடடே

அடடே 
முட்கள் இருந்தும் 
கவலை இல்லாத பயணம் ..
 
"கடிகாரம்"
  
ஷண்முக குமார்  ....  திருச்சி  

ENNUL NEE

என்னுள் (நீ)
நீ
என்னிடம்  
எதை  வேண்டுமானாலும்  
கேள் ..
 
என்னுள்  
இருக்கும் 
 உன்னைத்தவிர ....
 
செந்தில் ..,ஊட்டி  

MUTHAR KATHAL

முதற்காதல்
சஹாராவில்  சிந்திய
முதல்  பனித்துளியை  விட
தன்மையானது  ........

என்னவன்  சுவாசம்
சுமக்கும்  காற்றின்  தீண்டல் ...

இரவு  வானில்
வரும்  நிலவை  விட
ஒளியானது ....

புன்னகை  சிந்தும்
இதழ்களின்  முகம் .........

கம்பன்  செல்லி
கவிதைகளை  விட
இனிமையானது ........

உறங்கும்  பொழுதில்
உலரும்  சொற்கள் ............

வேரின்  நுனி  செல்லும்
நீர்த்துளியை  விட
ஆழமானது ......

நானும்  உன்னோடு
நாளும்  உன்  நினைவோடு .....
 
அருணா.. 

OVIYAM

ஓவியம்
சுத்தம்  செய்ய  மனம்  வரவில்லை
ஓவியமாய்  இருக்கிறது 
 ஒட்டடை .....
 
மின் அஞ்சல் வழியாக ....மீரா  
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]