Sunday, October 31, 2010

நினைவுகள்

நினைவுகள்


உன் உதடுகள் பேசமறந்த
வார்த்தைகளை உன் நினைவுகள்
பேசிவிடுகிறது என் நெஞ்யோடு ..........!

ச .சூட்டி

பேசும் கண்கள்

பேசும் கண்கள்


கவிதை பேசும் கண்கள்...!
காதல் பேசும் புருவம்....!
எதுவும் பேசாத உதடு......!
_இருந்தும்
எல்லாம் பேசிவிடும் உன் மௌனம் ......!

சூட்டி 

தொலைபேசி

தொலைபேசி


அன்பானவனே ....!
நீ அறிவாயா ....?
உன் கரங்களால் எடுக்கும்
வரை கதறும் உன் தொலைபேசி
ஒலியைப்போல.......................
என் இதயமும் இங்கே
கதறுவதை .........!

ச .சூட்டி

தாடி


தாடி


பெண்ணே....!
உள்ளத்தை நேசித்தால்
உறவுகள் வளரும் என்றார்கள் ......
நானும் உன்னை நேசித்தேன் .....
எனக்கும் வளர்கிறது ..
உன் உறவுகள் அல்ல....!
உன் நினைவாக தாடி ...............!


சூட்டி 

Friday, October 29, 2010

காதல் விஞ்ஞானி

காதல் விஞ்ஞானி 

அன்பே ...
நம் காதலைப்  பொறுத்தவரை 
நான் ஒரு விஞ்ஞானி தான் !

உன் மனதின் ஆழத்தை 
அறிந்து கொள்ள
இடை விடாமல் 
முயற்சிககுரேனே..!

சுரேஷ் குமார் ...பரம குடி..

அகிம்சை

அகிம்சை 
"மகாத்மாவின் கொள்கை என்ன?"
கேள்விக்கு விடை தெரியாத மாணவனை 
பிரம்பால் அடித்து விட்டு 
விடை சொன்னார் ஆசிரியர்
 "அகிம்சை" 

கிருஷ்ணன்...வட சேரி ..

அடடா

அடடா ...
வெண்ணிலவின் மேல்
 பனித்துளி 

என்னவளின் முகத்தில் 
வியர்வை ..

உமா மகேஸ்வரி ....புது கோட்டை 

நினைவுகள் 2

நினைவுகள் 2

உன்னை மறந்து என்
விழிகள் தூங்கினாலும் ..........

என் இதயம் விடுவதில்லை ......
நான் விழிக்கும் முன்பே
உன் நினைவுகளை எழுப்பிவிடுகிறது............!

ச.சூட்டி

தனிமை


தனிமை

தனிமையில் நான் உன்னை நினைக்க
விரும்பவில்லை.... !

உன்னை நினைப்பதற்காகவே தனிமையை
நான் விரும்புகிறேன் ......................!

-ச .சூட்டி

நினைவுகள்

நினைவுகள்


உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது .......

நீ பேசாமலே உன்
நினைவுகளை என்னோடு பேசவைக்க......!

ச .சூட்டி

தடைகளில்லை

தடைகளில்லை


அன்பே ....!
என் காதலில் முத்தங்களின்
ஈரமில்லை.......!

மூச்சுக்காற்றின் வெப்பமில்லை .....!
தொட்டுக்கொள்ள அருகிலில்லை .......!
உனக்கு நெருங்கிவர நேரமில்லை .......!

-அதனால்
விலகிச்செல்ல தேவையில்லை .....!
இருந்தாலும் நெருங்கிவிட்டேன் ......
நினைவுகளுக்கு தடைகளில்லை .....! -

ச.சூட்டி...மின் அஞ்சல் வழியாக  

கரு

கரு 
என்  காதலுக்கு  மட்டுமல்ல
 என்  கவிதைக்கும்  

நீ தான்  கரு ....என்பதால் 

என்  கவிதைகளில்  
என்  காதலும்  சற்று  கசிந்தது .

மின் அஞ்சல் வழியாக ...லதா கிருஷ்ணா 8870707094 jpt

பெண் குழந்தை


பெண் குழந்தை

இரவு அம்மாவுக்கு
பிடித்திருந்தது .......!

உறவு அப்பாவுக்கு
பிடித்திருந்தது ..........!

இரண்டுக்கும் இடையில் உருவான
என்னை மட்டும் .......... ஏனோ ....
இருவருக்கும் பிடிக்கவில்லை.......!

மின் அஞ்சல் வழியாக  -ச.சூட்டி

Tuesday, October 26, 2010

முன்னுக்கு பின் முரணாக

முன்னுக்கு பின் முரணாக 
தமிழன் 
புரியாத மொழி பேசுபவனை 
குருவாக பார்க்கிறான்
சரியாகத் தமிழ் பேசுபவனைக்
குறு குருவெனப் பார்க்கிறான் 

காற்றாடி ,கட்டில்,சோறு என்றால்
நகைக்கிறான் 
திக்கு ,திங்கள்,ஆழி என்றால் 
புரியாமல் 
திகைக்கிறான் 

உண்மை தானே 

அவனைப் பொறுத்தவரை 
மம்மி டாடி 
அங்கிள்  ஆன்டி என்று 
பேசுவது கண்ணியம் 

அப்பா அம்மா 
அத்தை மாமா 
சொற்கள் அன்னியம்!


புதுவை பிரபா ..தஞ்சை   

Sunday, October 24, 2010

அவளுடன் பயணம்


அவளுடன் பயணம்  
தனிமையான  என்  பயணத்தில் 

நிழலாய் அவள்  நினைவுகள் .


கிருஷ்ணா  

Wednesday, October 6, 2010

கண்ணீர் கடல்

கண்ணீர்  கடல்  
என்னவளே
உனக்காக கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்து நீராடிப்போ !!

அஜ்மீர் அலி
அய்யம்பேட்டை (தஞ்சை)

காதல் பிம்பம்

காதல் பிம்பம்
அடி பெண்ணே!
என் இதயம் ஒரு நாள் இரண்டாக உடையும்
அங்கு வந்து பார்
உன் பின்பம் தெரியும் !!!
 
 
அஜ்மீர் அலி
அய்யம்பேட்டை (தஞ்சை)
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]