Tuesday, November 30, 2010

அழகு


அழகு
நிலவை
சிறைப்பிடித்து
விட்டார்களோ?

ஜன்னலில் அவள்
'முகம்'....

சாஜிதா

காதல்


காதல்
வராத  மழையில்
'குடை பிடிக்கிறேன்'
நான் உனக்கு!

நனைந்து விட்டதாக
துடைத்து விடுகிறாய்
நீ எனக்கு!

வெட்கத்தில்
பூக்கத் தொடங்கியது

காதல்....!

துங்கை செல்வா

மாலைமாலை
இரவெல்லாம் விழித்திருந்து
மலர்ந்த பூக்கள்
பகலில் தூக்கம்...!
தண்ணீர் தெளித்து
தட்டி எழுப்பினாள்
'பூக்காரி'

பாங்காரு

நிஜம்


நிஜம்
பகல் வேளையெல்லாம்
உன் நினைவில் போனது
இரவெல்லாம்
உன் கனவிலே போகிறது....!
.
.காதல்....!!

மொய்தீன்

Monday, November 29, 2010

அரசியல்

அரசியல்

ek; fl;rpapd; rhh;gpy;
,e;j
gpr;ir epw;fpwhh;
,tiu
Nfhb Mf;f Ntz;baJ
cq;fs; nghWg;G....

நேசம்


நேசம்

மூச்சுக் காற்றை சுவாசிக்க மறந்தாலும்
நம்
நட்புக் காற்றில் சுவாசித்து இருப்பேன்
என்றும் நட்புடன்......

நா.சுரேஷ் குமார்

Sunday, November 28, 2010

இந்திய சுதந்திர தினம்


xU ehs; tpLKiw
kWgb Nfh\k;
nfhQ;rk; kpl;lha;
tphpAk; nfhbapy;
cjpUk; g+f;fs;

ekJ
fhjpy; $l

,dp ,y;iy cwf;fk;-----n[hp

Friday, November 26, 2010

அன்பு

அன்பு 

என்  இமைகள்  மூடினாலும் ,

 என்  கண்கள்   
உன்னை  
தேடி  கொண்டே   இருக்கும்  .....

ஹரிணி ...

தங்க கொலுசுதங்க  கொலுசு  ..
வைர  மோதிரம்  ..
தங்க  தோடு...
 வாங்கி  கொடுத்தேன்  என்  காதலிக்கு  ...
உனக்கென்ன  வேண்டும்  என்றேன்  என்  கண்ணீரை  துடைக்க  உன்  கைக்குட்டை  போதும்  என்றாள்    என்  தோழி ...........

----------மின் அஞ்சல் வழியாக மோகன் ..

Tuesday, November 23, 2010

கலியுகக் கண்ணகி


கலியுகக் கண்ணகி
நீ தானோ..?
.
.
கணவனையும் எரிக்கின்றாய் ...?

தொடு தூரம்தொடு தூரம் 
தொலை தூரம்
பயணித்தாலும்

உ(எ )ன்னிடமே
எ(உ )ன் மனம் ...
....

கோலம்கோலம் 
என் வாழ்க்கை கோலத்தில்
பல புள்ளிகள்
உன்னைப்  போல...
.
.
ஒன்று இல்லையெனும்
என்
வாழ்க்கை இல்லை.

.....

Monday, November 22, 2010

வேறுபாடு

வேறுபாடு
மோர் விற்ற பணத்தையும் 
காய் விற்ற பணத்தையும் 
கிராமங்களில்  
கடுகு டப்பாவிலும் 
சீரக டப்பாவிலும் 
சேர்த்து வைப்பார்கள்....

வாரத்திற்கு ஒருமுறை வரும் 
குடி தண்ணீரை நகரங்களில் 
கிரைண்டரிலும் 
மிக்சி ஜாரிலும் கூடப்
பிடித்து வைக்கிறார்கள் 

...நாவல் குமாரகேசன்

இழப்பு


இழப்பு 
அவளை  மறக்க  நினைத்து 
 மறந்து  விட்டேன் ...
.
.நான்  யார்  என்பதை .......

மின் அஞ்சல் வழியாக ....ரூபின் 

Sunday, November 21, 2010

ஈர விழிகள்ஈர விழிகள்  
அவளும் என்னை
காதலித்தால் என்று
புரிந்து கொண்டேன்...

கண்ணீருடன்
 அவளுடைய
திருமணத்திற்கு
என்னை அழைத்த போது...!

தேன் மொழி ...

விலையேற்றம்விலையேற்றம் 
விலைவாசி ஏற்றம் !
மாப்பிள்ளைகளுக்கு
கிராக்கி !
விலை கொடுத்து வாங்க
வசதியில்லை ...!
பக்கத்துக்கு வீட்டு பையா...
ஓடிப்  போகலாமா...?

பிச்சை ......

கேள்வி


கேள்வி 
அன்பே  நம்  காதல்
 என்ன  நகமா ?
 வளர  வளர  வெட்டுகிறாய் ..?

...மாரி சங்கர்

பெயர்ச்சி

பெயர்ச்சி 
 பெயர் மாற்றச்
சொல்கிறார்கள்
என் கணித மேதைகள் .
நல்லவேளை,
வாஸ்துவைக்
காரணம் காட்டி
உறுப்பு எதையும்
இடம் மாற்றச்
சொல்லவில்லை .

நல்லவேளை
தப்பினோம் ,
பிழைத்தோம் !
.........கவிஞர் .நீலமணி.

Saturday, November 20, 2010

முயற்சி


முயற்சி 
முடங்கி  கிடந்தால்
சிலந்தியும்  நம்மை 
வலை  பிடிக்கும் .

எழுந்து  நின்றால் 
எரிமலையும்  நமக்கு 
வழி  திறக்கும் 
.
.கார்த்திக் ...

Tuesday, November 16, 2010

விதவைவிதவை 
புதிதாய் பூத்த புது மலரே .
நீயும் உன் துணையை  இழந்து விட்டாயா?
வெள்ளை  நிறமாய் காட்சியளிக்கிறாய் ...

  ....மெர்வின்

பாதைபாதை 
பனித்துளியும்
உளியாய் இறங்கியது
நெஞ்சில்....

நீ நடந்த பாதை பார்க்கையில்.....

சுரேஷ்...

மழை துளி
மழை   துளி 
மழை வெள்ளமாய் பேச நினைத்தாலும்
மழை துளியாய் மட்டுமே வார்த்தைகள் ....

..........அழகு ராஜ் ...

காலமெல்லாம் காத்திருப்பேன்காலமெல்லாம் காத்திருப்பேன் 
காலங்கள் கடந்தாலும் காண காத்திருப்பேன்
பருவங்கள் பறந்தாலும் பாட காத்திருப்பேன்
உடல் உறைந்தாலும் உறவாட காத்திருப்பேன்

உயிரை இழக்காமல் இருந்தால்...

நித்யா.....

இந்தியா டுடேஇந்தியா  டுடே 
அன்னியர் ஆதிக்கத்தை அங்குலம் அளவும்
அன்னை பூமியில் தோன்றிட விடோம்
                                           -------------தேச பாதுகாவலர்கள்
அன்னியர் ஆதிக்கத்தை அங்குலம் அங்குலமாக
அன்னை பூமியில் தோன்றிட விடுவோம்
                                           -------------தேச துரோகிகள் .

                              ......பிரேம் குமார்

Sunday, November 14, 2010

அடடேஅடடே 
அன்னையும் பிதாவும்
'முன் எரி' தெய்வம் !
முதியோர் இல்லத்தில் !

ராம சந்திரன் ...

Saturday, November 13, 2010

வலிவலி
காதலிப்பது 
யாராக இருந்தாலும் 
கஷ்டபடுவது 
நான் மட்டுமே..
"இதயம்"

மின் அஞ்சல் வழியாக ....யாமினி பிரியா

புகைப்படம்புகைப்படம் 
அன்றுதான் எனக்கும் 
மணி பர்ஸ் 
வாங்கும் ஆசையே 
வந்தது ..
பணம் கிடைத்ததால் ..
அல்ல ...

அவளின் புகைப்படம் 
கிடைத்ததால் .. .. ..

தமிழ் பீட் ...

மழைமழை
தென்றலின்
தீண்டலால்
மேகம் என்ற
குழந்தை

"மழை"

தமிழ் பீட்

மின்னல்மின்னல் 
நேற்று
பெய்த  மழையில்
குடை பிடித்து வந்த
அந்த மின்னலால்
பறிபோனது
என் பார்வை அல்ல....

என் மனது ..

தமிழ் பீட்

போட்டிபோட்டி 
அவள்  பின்னால் 
போகும்போது தெரியவில்லை
இவ்வளவு சீக்கிரம் 
அவளுக்கு 
முன்னால் போவேன் என்று ....

"கல்லறைக்கு" 

தமிழ்  பீட்  

வாசல் இல்லா வீடு

வாசல்   இல்லா  வீடு 

அசந்து  தூங்கும்  காலையில் கடன்  காரனாய் கதிரவன்  வீசும்
இன்னிசை  தாலாட்டாய்  பேருந்தின்  இசை
கண்ணீரை  துடைத்து  செல்லும்  மழை சாரலில்  கரைகிறோம்
என்று  வரும் என்  வீட்டிற்கு  வாசல்  படிகள் ......

மின் அஞ்சல் வழியாக .........சுகன்யா

Friday, November 12, 2010

இடிதாங்கி

இடிதாங்கியாக இல்லா  விட்டாலும்  சுமைதாங்கி  ஆகிறேன் ..
உன்னால்  ,உன்  நினைவுகளை சுமப்பதினால் ...
விழி  மூடி  தூங்கும்  நேரத்திலும்  விழி  முன்னே நினைவாய்  நிற்கின்றாய்
விழி  திறந்து  காத்து    இருப்பேன்  என்  வாசலில்
உன்  பாத  சுவடுகள்  படியும்  நாளை  எதிர்நோக்கி .......!

                                   -சுகன்யா மின் அஞ்சல் வழியாக .

Thursday, November 11, 2010

என்னவள்


என்னவள் 
என்  நுனி  மூக்கு  கோபம்  கூட
என்னவளின்  ஒரு  நொடி சிரிப்பில்  மறையும் 
அவள்  விழி  ஓர  கசிவை  துடைக்க  என்  விரல்  நுனி  என்றும் ஏங்கும் ...!    
-Dedicated to mom...........

மின் அஞ்சல் வழியாக சுகன்யா .

Wednesday, November 10, 2010

காணவில்லை

காணவில்லை
என்  வீட்டு  முற்றத்தில்  சிதரிகிடக்கும்
அரிசிபருகைகளை  அழகாய்  கொத்திதின்னவரும்   
குருவிக்  கூட்டங்களை  காணவில்லை
கண்டுபிடுத்துத்  தாருங்கள்
குருவிகளோடு  தொலைந்துபோன 
அந்த  அழகிய  காட்சியை ....!

----மகாராஜா மின் அஞ்சல் வழியாக .

உளி

நாம் பெரும் "வலி"கள்...
நம்மை மேம்பட்ட மனிதனாக்க..
"உளி"யாக மாறிச் சிறம்பட செதுக்கவே..
படைக்கப் பட்ட ஒன்று...

--முருகவேல் மின் அஞ்சல் வழியாக   

காதலின் நிறம்

காதலின் நிறம் 
காதலுக்கு 
கற்பனைகள் 
அழகு ..!

ஆனால்

கற்பனையில் 
மட்டும்தான் 
காதல் அழகு .....!!

தமிழ் நெட் 

மாற்றம்

மாற்றம்
வலிக்கின்ற  இதயமும் 
வடிகின்ற கண்ணீரும் 
நிச்சயம் ஒரு நாள் மாறும் 

உண்மையான காதலும் 
உறுதியான நம்பிக்கையும் 
இருந்தால் ...

தமிழன்   

திருடர்கள் ஜாக்கிரதை

திருடர்கள்  ஜாக்கிரதை 
கோவில் திருவிழாவில்
அறிவிப்பு செய்தார்கள் 
கேட்டுகொண்டே தொலைத்தேன் 
என் இதயத்தை 
அவளிடம் ....  

தமிழன் 

நிஜம்

நிஜம் 
பகல் வேலையெல்லாம் உன் 
நினைவில் போனது
 
இரவெல்லாம் 
உன் கனவிலே போகிறது ..!
காதல்...!!

மொய்தீன்  

ஏக்கம்

ஏக்கம் 
அதட்டுகிறார் 
முதலாளி ...

அவசர அவசரமாய் 
மணப்பெண்ணிற்கு 
மாலை கட்டுகிறாள் 

முதிர்கன்னி !

சே. பாக்கியராஜ்  

வேதனை

வேதனை 
தனி மரங்கள் 
தோப்பாகின...
முதியோர் இல்லம் ! 

நெல்லை  கணேஷ்  

நிலவின் வயது

நிலவின் வயது 
சூரியனின் 
வயது 
என்னவென்று 
தெரியாது...
ஆனால்
நிலவின் 
வயது தெரியும்...
பதினாறு!
அவள் தானே 
என் நிலவு..

மூர்த்தி ... 

கவலை

கவலை 
பார்வை அம்புகள் 
எத்தனை பட்டதோ ...

இத்தனை பருக்கள் 
உன் முகத்தில் !..

தென்றல் ஆறுமுகம் ,மின் அஞ்சல் வழியாக   

Sunday, November 7, 2010

தொட்டில் மரங்கள்

தொட்டில் மரங்கள் 

*ஆங்கிலத்தில் திட்டுகிறார் 
ஆசிரியர் 
வகுப்பறைச் சுவற்றில் 
"இனிய உளவாக 
இன்னாத கூறல்"

* ஆங்கிலம் படித்தால் தான் 
அறிவு வளரும் என்கிறீர்கள் 
தமிழ் படித்த 
கலாமை மட்டும் 
தலைவர் என்கிறீர்கள் 

*கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள் 
எங்களையும் 
கொஞ்ச 
நேரம் ஒதுக்குங்கள்....
இப்படிக்கு இன்றைய குழந்தைகள் 

*எங்களுக்காக
 குழந்தைகள் காப்பகம்
 இன்று. 
உங்களுக்காக
முதியோர் காப்பகம்
 நாளை.

     
         ...............சே .ப.வீரதிருக்குமரன் 

Monday, November 1, 2010

காதல் வலை

காதல்  வலை 
கண்களால் வலை விரித்தாய் 
புன்னகையால் சிறை பிடித்தாய்
குற்றங்கள் செய்தது நீ 
தண்டனை மட்டும் எனக்கு !
உன் இதய சிறையில் 
ஆயுள் கைதியாய் நான்...!

கிருத்திகா 

உழைப்பு

உழைப்பு 

வெயிலில் அலைந்து திரிந்து 
கருவாடாய் ஆனாலும் 
கூவி விற்கிறாள் 
மீனை...!

ஜெனிபிர் ..சென்னை  

அப்படியா

அப்படியா

நல்ல காலம் எப்போ வரும் ..
ஏக்கத்துடன் குடுகுடுப்பைக்கரர் !

சாமி நாதன்...

உள்ளம்


உள்ளம் 
உள்ளம்  என்னும்  வெற்றிடத்தை


 உன்  நினைவுகள்  கொண்டு  நிரப்ப  முயேன்றேன்
அது  சுனாமியாய்  மாறியது ஏனோ ? 

- என்  கோவகார காதலியே  ...!

தாமஸ்
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]