Sunday, July 4, 2010

நீச்சல் குளத்துச் சிறுமி

நீச்சல்  குளத்துச் சிறுமி
 
தவறிப்போன  
ஆற்றின்  பேரழகை  

புறக்கணிகப்பட்ட
கிணற்றின்  சுடர்மிகு  ஆழத்தை  

மறுக்கப்பட்ட
குளத்தின்  பெரும்  அமைதியாய்

தேடித்தேடி  நீந்துகிறாள்

சுற்றுலாத்  தளத்தின்
செயற்கை  நீச்சல்  தொட்டியில்  

 சிறகுகளை குறுக்கிய  படி

சிறுமி ஒருத்தி ..
 
-----------க .அம்சப்  பிரியா ,மின் அஞ்சல் வழியாக .... 

BOOMI

பூமி
 
நாம்  நம்  முன்னோர்களிடம்  இருந்து 
 
  பூமியை
 
கடனாக  பெற்று  இருக்கிறோம்....
 
 
 
அனுபவிக்க  முழு  உரிமை   உண்டு
 
அழிக்க  துளி  கூட  உரிமை  இல்லை ...
 
                   மின் அஞ்சல் வழியாக ....பசுமை தாசன்

DHAANAM

தானம்
 
முல்லைக்கு  தேர்  கொடுத்தானாம்
  பாரி  மன்னன்
 
அவனுக்கென்ன  
 
அது  மக்களின்  வரிப்பணம்  தானே........
 
-------------மு. கண்ணதாசன் ,மின் அஞ்சல் வழியாக

Tuesday, June 8, 2010

YUGA MATTRAM

யுக மாற்றம்
நிதான  யுகத்தில் 
அவசரமாய் 
பிள்ளைகள் பெற்றார்கள்...
 
 
அவசர யுகத்தில் 
நிதானமாய் 
பிள்ளை பெறுகிறார்கள் !
 
---------  கே ஜி  ராஜேந்திர  பாபு ,மின் அஞ்சல் மூலமாக .....

MARAM

மரம் 
மரம் வெட்டிய பின்
மரத்தை தேடினான் 
.
.
நிழலுக்காக ...  
 
               மின் அஞ்சல் வழியாக .....மினி

VETKAM

வெட்கம்
சூரியன் வந்தும்
மறையாத  நிலவாய்
நான்....
 
என்  வெட்கங்கள்
உன்னை  பார்த்த  பிறகும் ...!
 
         ----------அருணா ,மின் அஞ்சல் வழியாக

KAATHAL

காதல்
பிறக்க காரணமும்  காதல்  தான் ..
இறக்க  காரணமும்  காதல்  தான் ...
.
.
இரு  மனிதன்  கொண்ட  காதலில்  பிறக்கிறோம் ..
மனிதன்  மீது 
காலம்  கொண்ட  காதலில்  இறக்கிறோம் ..!
 
------அருணா ,மின் அஞ்சல் வழியாக
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]