Wednesday, August 4, 2010

அடடே

அடடே 
முட்கள் இருந்தும் 
கவலை இல்லாத பயணம் ..
 
"கடிகாரம்"
  
ஷண்முக குமார்  ....  திருச்சி  

ENNUL NEE

என்னுள் (நீ)
நீ
என்னிடம்  
எதை  வேண்டுமானாலும்  
கேள் ..
 
என்னுள்  
இருக்கும் 
 உன்னைத்தவிர ....
 
செந்தில் ..,ஊட்டி  

MUTHAR KATHAL

முதற்காதல்
சஹாராவில்  சிந்திய
முதல்  பனித்துளியை  விட
தன்மையானது  ........

என்னவன்  சுவாசம்
சுமக்கும்  காற்றின்  தீண்டல் ...

இரவு  வானில்
வரும்  நிலவை  விட
ஒளியானது ....

புன்னகை  சிந்தும்
இதழ்களின்  முகம் .........

கம்பன்  செல்லி
கவிதைகளை  விட
இனிமையானது ........

உறங்கும்  பொழுதில்
உலரும்  சொற்கள் ............

வேரின்  நுனி  செல்லும்
நீர்த்துளியை  விட
ஆழமானது ......

நானும்  உன்னோடு
நாளும்  உன்  நினைவோடு .....
 
அருணா.. 

OVIYAM

ஓவியம்
சுத்தம்  செய்ய  மனம்  வரவில்லை
ஓவியமாய்  இருக்கிறது 
 ஒட்டடை .....
 
மின் அஞ்சல் வழியாக ....மீரா  

Sunday, July 4, 2010

நீச்சல் குளத்துச் சிறுமி

நீச்சல்  குளத்துச் சிறுமி
 
தவறிப்போன  
ஆற்றின்  பேரழகை  

புறக்கணிகப்பட்ட
கிணற்றின்  சுடர்மிகு  ஆழத்தை  

மறுக்கப்பட்ட
குளத்தின்  பெரும்  அமைதியாய்

தேடித்தேடி  நீந்துகிறாள்

சுற்றுலாத்  தளத்தின்
செயற்கை  நீச்சல்  தொட்டியில்  

 சிறகுகளை குறுக்கிய  படி

சிறுமி ஒருத்தி ..
 
-----------க .அம்சப்  பிரியா ,மின் அஞ்சல் வழியாக .... 

BOOMI

பூமி
 
நாம்  நம்  முன்னோர்களிடம்  இருந்து 
 
  பூமியை
 
கடனாக  பெற்று  இருக்கிறோம்....
 
 
 
அனுபவிக்க  முழு  உரிமை   உண்டு
 
அழிக்க  துளி  கூட  உரிமை  இல்லை ...
 
                   மின் அஞ்சல் வழியாக ....பசுமை தாசன்

DHAANAM

தானம்
 
முல்லைக்கு  தேர்  கொடுத்தானாம்
  பாரி  மன்னன்
 
அவனுக்கென்ன  
 
அது  மக்களின்  வரிப்பணம்  தானே........
 
-------------மு. கண்ணதாசன் ,மின் அஞ்சல் வழியாக
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]