Friday, July 22, 2011

சிறை



சிறை 

நிலவு ,வானம்,விடியல் .....

என  ஆயிரம்  கவிதைகள்

 மனதில் இருந்தும்

 எழுத  மட்டும்  முடியவில்லை ....

பள்ளி  செல்லாத  குழந்தை


தொழிலாளியாய் ....



மின் அஞ்சல் வழியாக ....ஜனனி

நறுமணம்



நறுமணம் 
நீ   என்னை 
 கடந்து  போகையில் 
 மனதில்  குழப்பம் ...

 வாசம்  வீசுவது 

 நீயா  இல்லை  பூவா  என்று ?


ராம்குமார்....மின் அஞ்சல்  வழியாக 

உன்னை நினைத்து



உன்னை   நினைத்து  

என்  வீட்டு  சுவற்றிற்கு

நான்  இட்ட  முத்தங்களை

 கேட்டு  பார் ..

அது  சொல்லும்

 என் காதலை
 சத்தமில்லாமல் .....!!!



புவனா ...மின் அஞ்சல் வழியாக

Thursday, June 30, 2011

மௌன மொழி



மௌன  மொழி …
நீ  பேசும் 
வார்த்தை  எல்லோருக்கும்  தெரியும் 

  ஆனால்

உன்  மௌனம்  உன்னை  நேசிப்போருக்கு   
மட்டுமே  புரியும் ...

தமிழன் ...மின் அஞ்சல் வழியாக 

விடா முயற்சி



விடா  முயற்சி …

நம்பிக்கையுடன் 
நகர்ந்து   கொண்டே  இரு 
“நதி" போல …

ஒரு   இடத்தில் வெற்றி 
காத்திருக்கு 
“கடலாக”

மின் அஞ்சல் வழியாக "தமிழன் " 

Friday, June 17, 2011

என் உலகம்


என் உலகம் 
என் உலகமே...  நீ  தான்
எங்கே  சுற்றினாலும் 
 
உன்னிடமே  முடிகின்றன .....

என் நினைவுகள் .......!!!

.
.புவனா..மின் அஞ்சல் வழியாக ..

Thursday, May 12, 2011

நான் உன்னை .........


நான்  உன்னை ......................
நான் உன்னை  காதலித்தேன் ,
காதலிக்கிறேன் 
இன்று  வரை  அல்ல  என்  வாழ்  நாள்  காலம்   
முடுயும்  வரை ,அழியும்  வரை 
யார்  தடுத்தாலும் ? யார்  எதிர்த்தாலும் ?

நீ  என்னை  திட்டி  மனம்  
வருந்தி  பேசி  இருக்கையில் 
நானும்  என் இதயமும்  உன்னை 
வெறுக்க  இது  வரை நினைத்தது  இல்லை 

ஏனோ ...........
முன்பு  இருந்த பாசமோ ,அன்போ  ,இஷ்டமோ 
இப்பொது  இல்லை என்று  தெரிந்த 
அந்த  நொடி  நான்  ஏதோ ...ஒரு   உயிர்  இல்லாத  
ஒரு  உடல்  போல  இருந்தேன் … 


அதே  போல் 
உன்னை நினைத்து  வாழ்ந்து 
கொண்டு  இருக்கும்  என் இதயத்தில் 
வேறு  ஒருவுனுக்கு  இடம்  குடுக்க 
நான் எப்போதும்  என்றுமே  விரும்ப  மாட்டேன்  
இந்த  முடிவு  என் இதயம்  
இந்த பூமியில்  துடிக்கும்  வரை ........நீடிக்கும் ......


கவி...மின் அஞ்சல் வழியாக ....
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]