கவிதை நடை
நீ நடந்துவரும் அழகை
ஒரு கவிதையாய்
சொல்வதற்குள்
நூறு பாடல்களை பாடிவிட்டது
உன் கால் கொலுசு ....
மின் அஞ்சல் வழியாக,,,,,, சுரேஷ்
உனக்காக
எடுத்து
சூடிக்கொள்
உன்
நினைவுகளால்
பூத்து கிடக்கும்
என் மனதை ...
மின் அஞ்சல் வழியாக ... செல்வா
அடடா
பூக்காமலும்
உதிராமலும் ...
அரும்பாக மட்டுமே
அழகாக
இருக்கிறதே .!
உன்
மௌன உதடுகள் ...!
ரவி சந்திரன்,,மின் அஞ்சல் வழியாக
காதல் தோல்வி
என்னை நீ
ஏமாற்றியது
உனக்கேன்னவோ
சாதாரணம்
என் நெஞ்சிலோ
சதா "ரணம்"
மின் அஞ்சல் வழியாக, பெரிய சாமீ
கேள்வி
வாழ்கையில் ஒரு பாதி
கற்றலில் கழிந்தது !
மறு பாதி
தேடலில் கழியப்போகிறது !
மீதம் எங்கே இருக்கிறது வாழ்வதற்கு ...?
ரபீக் ,புளியங்குடி மின் அஞ்சல் வழியாக
பாவ மன்னிப்பு
நேற்று என் கைகளை
முட்களால் ...
காயப்படுத்திய ரோஜா
இன்று
கண்ணீர் விட்டு
அழுகிறது ...!
பனித்துளியாய் !!
மின் அஞ்சல் வழியாக ....கோபி ,சென்னை
காதல் யாத்திரை
அவள்
கொலுசு சத்தத்தோடு
நடக்கும் போது
சத்தமில்லாமல்
கூடவே
நடக்கிறது
..
..
என்
காதல் ...
மின் அஞ்சல் வழியாக ,,,ரவி
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .