Friday, October 28, 2011

சோதனை


சோதனை 


மனதில் நூறு  வேதனை 

சொல்ல  ஒரு  வார்த்தை  இல்லை 
 
இன்னும்  என்ன  சோதனை 
 
நல்லதொரு  வாழ்க்கை  இல்லை ...




மின் அஞ்சல் வழியாக ....தயானி 

Thursday, August 18, 2011

ஒவ்வாமை

ஒவ்வாமை 



நான்  நட்டு  வளர்த்த  செடியில்
பூத்த பூக்களையும்

காய்த்த கனிகளையும்
கண்டு  ரசித்த  என்  மனம்

ஏனோ  ஏற்க  மறுக்கிறது ....

பேஸ் புக்கில்
என் நண்பர்கள்
அனுப்பும்.....

  farmville requestkalai  


மின் அஞ்சல் வழியாக ...மகாராஜா 

உன் விழி

உன் விழி




நீ


உன் விழியே... விழியே
என் வலி தீர்த்திடும் மருந்தல்லவா

உன் மொழியே... மொழியே
என் கண்ணீரை துடைத்திடும் துணி அல்லவா

இது நெடு நாள் வாழும் பந்தம்
உன் மடி மீது தூங்கும் என் நெஞ்சம்

அடடா... அழகிய சொர்க்கம்
நீ.. அருகினில் இருந்தால் வாசல் திறக்கும்

உனை பார்த்த பின்புதானே
நானே நான் ஆகினேன்....


இதுவரை...
விடிந்த பின்னும் கிழக்கு எனக்கு இல்லை
இருந்திருந்தும் என் விரல் பிடித்தாய்
இனி என் உலகினில் சூரியன் தேவையில்லை...

முன்பு...
சுழன்றபோதும் சுகம் எனக்கு இல்லை
உடைந்திருந்தும் எனக்கு உயிர் கொடுத்தாய்
ஆகவே நீளும் நேரம் போதவில்லை...

வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன்
புது வானவில்லாய், தொடும் நிழலாய் நீயும் வந்தாய்....



நீ...
சரி என்றால் அன்பே
எனக்கெனும் ஆயுளை உனக்கு கொடுத்திடுவேன்
நீ...
சிரிப்பதென்றால் அய்யோ
நான் சிறு குழந்தையாய் மாறிடுவேன்

மறைந்தோடும் தென்றலாய்
நாளும் மனதோடு தீண்டுகிறாய்
இனி.. என் உயிர் போவதென்றால்
உன் நிழல் மீது தான் அன்றோ...


மழை பொழிந்தால், உடனே
நான் குடையயன உனக்கிருப்பேன்
ஒரு துளி விழுந்தாலும் அய்யோ
என் உயிரையும் நான் இழப்பேன்...

எனக்காக துடிக்கும்
உனக்காக என் உயிர் தருவேன்
எனக்கேதும் இல்லைஎன்றபோதும்
நீ இருக்க மரணத்திலும் நான் இதழ் விரிப்பேன்


வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன்
புது வானவில்லாய், தொடும் நிழலாய் நீயும் வந்தாய்....!!



மின் அஞ்சல் வழியாக ...வித்யாசன் 

Friday, July 22, 2011

சிறை



சிறை 

நிலவு ,வானம்,விடியல் .....

என  ஆயிரம்  கவிதைகள்

 மனதில் இருந்தும்

 எழுத  மட்டும்  முடியவில்லை ....

பள்ளி  செல்லாத  குழந்தை


தொழிலாளியாய் ....



மின் அஞ்சல் வழியாக ....ஜனனி

நறுமணம்



நறுமணம் 
நீ   என்னை 
 கடந்து  போகையில் 
 மனதில்  குழப்பம் ...

 வாசம்  வீசுவது 

 நீயா  இல்லை  பூவா  என்று ?


ராம்குமார்....மின் அஞ்சல்  வழியாக 

உன்னை நினைத்து



உன்னை   நினைத்து  

என்  வீட்டு  சுவற்றிற்கு

நான்  இட்ட  முத்தங்களை

 கேட்டு  பார் ..

அது  சொல்லும்

 என் காதலை
 சத்தமில்லாமல் .....!!!



புவனா ...மின் அஞ்சல் வழியாக

Thursday, June 30, 2011

மௌன மொழி



மௌன  மொழி …
நீ  பேசும் 
வார்த்தை  எல்லோருக்கும்  தெரியும் 

  ஆனால்

உன்  மௌனம்  உன்னை  நேசிப்போருக்கு   
மட்டுமே  புரியும் ...

தமிழன் ...மின் அஞ்சல் வழியாக 
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]