Wednesday, March 30, 2011

உன் நினைவுகள்...!!!உன் நினைவுகள்...!!!

சுள்ளென்று சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலும்
நிலவின் குளிர்ச்சியாய்
உன் நினைவுகள்..!

அரவற்று கிடக்கும் பாலைவனத்திலும்
நத்தவனத்தின் பசுமையாய்
உன் நினைவுகள்..!

கடுங்குளிர் காலை பயணத்திலும்
கதகதப்பாய்
உன் நினைவுகள்..!

அலுவலக தொலை பேசி சினுங்கல்களிலும்
என் கைபேசியின்
உன் குருந்செய்தியின் மணியாய்
உன் நினைவுகள்..!

காலை நேர பயணத்தில்
ஆட்டோக்களின் அலறலுக்கும்
பேருந்தின் இரைச்சல் சபத்ததிற்க்கும் இடையில்
பேரமைதியாய்
உன் நினைவுகள்..!

பெரும் சூறை காற்று வீசும்போதும்
தென்றலின் தொடுதலாய்
உன் நினைவுகள் ..!

அம்மு
உன் நினைவுகளே போதும்
என் இதயம் துடிக்க
என்றென்றும் உயிர்த்திருப்பேன்..!!!..
..
..
ராதா கிருஷ்ணன் 

இனியவளே!இனியவளே!
உயிருள்ளவரை
என்னால்
நிறுத்தமுடியாத
விஷயம் ஒன்று
காற்றை சுவாசிப்பது..!

உயிர்போனபின்பும்
நிறுத்தமுடியாத
விஷயம் ஒன்று
உன்னை நேசிப்பது....!!!

..
..
..
ராதா  கிருஷ்ணன்  

நம் காதல்

நம் காதல்

என் உலகம் எதுவென்றால்
அது நீதானே
உன் இதயம் எதுவென்றால்
அது நான்தானே
நீ வேறு, நான் வேறு என்று வழி மாறிடாது
எப்போதும் நாமாவோம் ஒன்று....

இமை ஒட்டி சற்று விழி மூடினால்
என் இரவுக்குள் உன் முகம் விண்மீன்களாய்
என் கடிகார முள்ளாக நீ நகர்வதால்
என் காலம் கரைகிறது காதல் கணமாய்...

நீ வருகின்ற திசை எல்லாம் உனக்காகத்தான்
கிளை இலை எல்லாம் மழைத் துளியாக உதிர்கின்றதே
உன் வளையோசை அசைகின்ற இசை கேட்கத்தான்
வெயில் மீறி குயில் எல்லாம் தவம் கிடக்கின்றதே....

இமை மூடும் கணம் எனை நீ பிரிந்தாலுமே
என் வானம் தரைதட்டி வீழ்கின்றதே
உன் மடி மீது எனை சாய்த்து நீ தலை கோதினால்
அந்த தருணங்கள் தனி உலகங்கள் ஆகின்றதே....

எந்தன் உயிர் நீங்கும் நிமிடத்தில் உந்தன் விரல் தீண்டால்
எந்தன் தேகத்தின் காயங்கள் சுகமாகும்
உன் வாழ்க்கையின் மொத்தம் நான் நிரம்பினால்
நம் காதல் ஒன்றே உலகில் முதலாகும் !!

..
..
..
வித்யாசன் 

Monday, March 28, 2011

நிழல்

நிழல் 
நான்  வெட்டி  வீசிய  நகங்கள்
மரமாக  மாறி விட்டன 

நீ  வரும்போது  நிழல்
தர  வேண்டும்  என்பதற்காக .....


முஹமது மைதீன் 

நியாயம்

நியாயம் 
காதலுக்காக உன்  உயிரையும்  கொடு 
உன் காதல்  உண்மையாக  இருந்தால்  மட்டுமல்ல ...

உன்னை  நேசிப்பவரும் உண்மையாக 
இருந்தால்  மட்டுமே ....


முஹம்மத் மைதீன் ...

Saturday, March 19, 2011

தோழி**போன வருடம்

பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன

தோழி ஒருத்திக்கு

இந்த பிறந்த நாளில்

இருக்கேனா... செத்தேனா?

எனத் தெரியவில்லை.**அடுத்த கவிதைத் தொகுப்பின்

முதல் பிரதி

தனக்கே வேண்டுமெனச் சொன்ன

முப்பது தோழிகளின் புதிய எண்களும்

என்னிடம் இல்லை.**மூன்று வேளைகளும்

சாப்பிட்டாயா? என

குறுந்தகவலில் குடைச்சல் தந்த

தோழியின் அலைபேசிக்கு

அழைக்கிறபோதெல்லாம்

அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்

சொல்லப்படுகிறது.**என் மகளைத் தன் மகனுக்குக்

கேட்பேன் எனச் சொன்ன

தோழி ஒருத்தி

அவள் திருமணத்துக்கே

என்னை அழைக்கவில்லை.**திருமணத்துக்குப் பிறகு

தற்செயலாகச் சந்தித்த

தருணமொன்றில் தோழி ஒருத்தியிடம்

கோபித்துக்கொண்டேன்

அவளோ

'அவர் சரி, அத்தை - மாமாவிடம்

சிநேகிதன் ஒருவன் இருந்தானென

எப்படிச் சொல்வது?' என்றாள்.

இருந்தானில் இறந்துபோயிருந்தது

எங்கள் நட்பு!

*
*
*
முருகவேல் ...

பஞ்சம்

ஏழ்மையின் அவலம்
இவர்களையும் விட வில்லை


உணவிற்கே பஞ்சம்
உலை ஏற்ற விறகுக்கும்
பஞ்சம்....


...இவள் மேல் இயற்கைக்கும்
கோபமா?????
அடிக்கடி வந்து போகும்
உறவினர் போல்
இவள் வீட்டை சுத்தப்படுத்தும்
வெள்ள நீர்...


சமையலறையுடன் இவளுக்கான
போராட்டம் ....


மாடி வீடு அறியாது .....


நீதி தேவதைகள் கண் திறக்கும்
வரை இவள் போராட்டம் தொடரும் ...

'
'
'
தார்சி ...

முழுமதிமுப்பது நாள் கழித்துதான்
எனக்கு உன் முழுமதி நிலவு
முகத்தரிசனம் கிடைக்குமென்கிறாய்..!


நிலவின்றி இரவிற்கேது வெளிச்சம்..?
நீயின்றி என் மனதிற்கேது வெளிச்சம்..?
விரைவில் என்னிடம் வந்து விடு…


என் விடியல் உனக்காக காத்திருக்கிறது..!

.
.
.
ராதா கிருஷ்ணன் 
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]