Wednesday, December 22, 2010

தமிழ் தாய்

தமிழ்  தாய்

அம்மாவென அழைத்தது குழந்தை
அடுத்த நிமிடம் விழுந்தது அடி
 .
.

'கால் மீ மம்மி'
வசீகரன்

ஓட்டம்

ஓட்டம் 

முதியோர் இல்லம் நோக்கி
ஓட்டம் பிடித்தது குழந்தை
 .
.
பாட்டி பாசம்!
வசீகரன்

சுமை

சுமை 
மூட்டை சுமப்பவனிடம்
சிறுவன் கேட்டான்

'நீ எந்தப் பள்ளிக்கூடம்'
வசீகரன்

வெள்ள மனசு

வெள்ள மனசு

சாக்லைட்டைத் தின்றுவிட்டு
திருடனிடம் சொன்னது


'இந்த சங்கிலி கவரிங் !'

வசீகரன்

பாசம்

பாசம் 

கோபமாய் அம்மா
குழந்தையைத் திட்டினாள்
.
வலியில் பாட்டி!!
வசீகரன்

Tuesday, December 21, 2010

மொழி




மொழி

அம்மாவுக்கு மட்டும்
அரும்பொருள் புரிகிறது

தத்தக்கா புத்தக்கா!
வசீகரன்

வருங்கால இந்தியா


வருங்கால இந்தியா



சுள்ளென்று வெயில்
வரிசையில் குழந்தைகள்...


எப்ப வருவார் அமைச்சர்?

வசீகரன்

Wednesday, December 15, 2010

நினைவுகள்


நினைவுகள் 
"உன்னை சுற்றி 
ஒரு முறை பார் ..!


 உன் நிழல் 
இருக்கிறதோ இல்லையோ 


என்  நினைவுகள் உன்னை சுற்றியே இருக்கும் "..!

தாமஸ்.

Sunday, December 5, 2010

ரகசியம்



ரகசியம்

பெண் என்பவள்
காக்க வேண்டிய
பொக்கிஷம் -
ஆனால்

 பார்க்க
வேண்டிய ரகசியம்...

மோகன்

பந்தம்

பந்தம்
உன் விரல் பிடித்து நடப்பது என்றால்
.
.
என் கை ரேகை மாறும்
நெடுஞ்சாலையாக!

வித்யாசன்

Tuesday, November 30, 2010

அழகு


அழகு
நிலவை
சிறைப்பிடித்து
விட்டார்களோ?

ஜன்னலில் அவள்
'முகம்'....

சாஜிதா

காதல்


காதல்
வராத  மழையில்
'குடை பிடிக்கிறேன்'
நான் உனக்கு!

நனைந்து விட்டதாக
துடைத்து விடுகிறாய்
நீ எனக்கு!

வெட்கத்தில்
பூக்கத் தொடங்கியது

காதல்....!

துங்கை செல்வா

மாலை



மாலை
இரவெல்லாம் விழித்திருந்து
மலர்ந்த பூக்கள்
பகலில் தூக்கம்...!
தண்ணீர் தெளித்து
தட்டி எழுப்பினாள்
'பூக்காரி'

பாங்காரு

நிஜம்


நிஜம்
பகல் வேளையெல்லாம்
உன் நினைவில் போனது
இரவெல்லாம்
உன் கனவிலே போகிறது....!
.
.காதல்....!!

மொய்தீன்

Monday, November 29, 2010

அரசியல்

அரசியல்

ek; fl;rpapd; rhh;gpy;
,e;j
gpr;ir epw;fpwhh;
,tiu
Nfhb Mf;f Ntz;baJ
cq;fs; nghWg;G....

நேசம்


நேசம்

மூச்சுக் காற்றை சுவாசிக்க மறந்தாலும்
நம்
நட்புக் காற்றில் சுவாசித்து இருப்பேன்
என்றும் நட்புடன்......

நா.சுரேஷ் குமார்

Sunday, November 28, 2010

இந்திய சுதந்திர தினம்


xU ehs; tpLKiw
kWgb Nfh\k;
nfhQ;rk; kpl;lha;
tphpAk; nfhbapy;
cjpUk; g+f;fs;

ekJ
fhjpy; $l

,dp ,y;iy cwf;fk;-----n[hp

Friday, November 26, 2010

அன்பு

அன்பு 

என்  இமைகள்  மூடினாலும் ,

 என்  கண்கள்   
உன்னை  
தேடி  கொண்டே   இருக்கும்  .....

ஹரிணி ...

தங்க கொலுசு



தங்க  கொலுசு  ..
வைர  மோதிரம்  ..
தங்க  தோடு...
 வாங்கி  கொடுத்தேன்  என்  காதலிக்கு  ...
உனக்கென்ன  வேண்டும்  என்றேன்  என்  கண்ணீரை  துடைக்க  உன்  கைக்குட்டை  போதும்  என்றாள்    என்  தோழி ...........

----------மின் அஞ்சல் வழியாக மோகன் ..

Tuesday, November 23, 2010

கலியுகக் கண்ணகி


கலியுகக் கண்ணகி
நீ தானோ..?
.
.
கணவனையும் எரிக்கின்றாய் ...?

தொடு தூரம்



தொடு தூரம் 
தொலை தூரம்
பயணித்தாலும்

உ(எ )ன்னிடமே
எ(உ )ன் மனம் ...
....

கோலம்



கோலம் 
என் வாழ்க்கை கோலத்தில்
பல புள்ளிகள்
உன்னைப்  போல...
.
.
ஒன்று இல்லையெனும்
என்
வாழ்க்கை இல்லை.

.....

Monday, November 22, 2010

வேறுபாடு

வேறுபாடு
மோர் விற்ற பணத்தையும் 
காய் விற்ற பணத்தையும் 
கிராமங்களில்  
கடுகு டப்பாவிலும் 
சீரக டப்பாவிலும் 
சேர்த்து வைப்பார்கள்....

வாரத்திற்கு ஒருமுறை வரும் 
குடி தண்ணீரை நகரங்களில் 
கிரைண்டரிலும் 
மிக்சி ஜாரிலும் கூடப்
பிடித்து வைக்கிறார்கள் 

...நாவல் குமாரகேசன்

இழப்பு


இழப்பு 
அவளை  மறக்க  நினைத்து 
 மறந்து  விட்டேன் ...
.
.நான்  யார்  என்பதை .......

மின் அஞ்சல் வழியாக ....ரூபின் 

Sunday, November 21, 2010

ஈர விழிகள்



ஈர விழிகள்  
அவளும் என்னை
காதலித்தால் என்று
புரிந்து கொண்டேன்...

கண்ணீருடன்
 அவளுடைய
திருமணத்திற்கு
என்னை அழைத்த போது...!

தேன் மொழி ...

விலையேற்றம்



விலையேற்றம் 
விலைவாசி ஏற்றம் !
மாப்பிள்ளைகளுக்கு
கிராக்கி !
விலை கொடுத்து வாங்க
வசதியில்லை ...!
பக்கத்துக்கு வீட்டு பையா...
ஓடிப்  போகலாமா...?

பிச்சை ......

கேள்வி


கேள்வி 
அன்பே  நம்  காதல்
 என்ன  நகமா ?
 வளர  வளர  வெட்டுகிறாய் ..?

...மாரி சங்கர்

பெயர்ச்சி

பெயர்ச்சி 
 பெயர் மாற்றச்
சொல்கிறார்கள்
என் கணித மேதைகள் .
நல்லவேளை,
வாஸ்துவைக்
காரணம் காட்டி
உறுப்பு எதையும்
இடம் மாற்றச்
சொல்லவில்லை .

நல்லவேளை
தப்பினோம் ,
பிழைத்தோம் !
.........கவிஞர் .நீலமணி.

Saturday, November 20, 2010

முயற்சி


முயற்சி 
முடங்கி  கிடந்தால்
சிலந்தியும்  நம்மை 
வலை  பிடிக்கும் .

எழுந்து  நின்றால் 
எரிமலையும்  நமக்கு 
வழி  திறக்கும் 
.
.கார்த்திக் ...

Tuesday, November 16, 2010

விதவை



விதவை 
புதிதாய் பூத்த புது மலரே .
நீயும் உன் துணையை  இழந்து விட்டாயா?
வெள்ளை  நிறமாய் காட்சியளிக்கிறாய் ...

  ....மெர்வின்

பாதை



பாதை 
பனித்துளியும்
உளியாய் இறங்கியது
நெஞ்சில்....

நீ நடந்த பாதை பார்க்கையில்.....

சுரேஷ்...

மழை துளி




மழை   துளி 
மழை வெள்ளமாய் பேச நினைத்தாலும்
மழை துளியாய் மட்டுமே வார்த்தைகள் ....

..........அழகு ராஜ் ...

காலமெல்லாம் காத்திருப்பேன்



காலமெல்லாம் காத்திருப்பேன் 
காலங்கள் கடந்தாலும் காண காத்திருப்பேன்
பருவங்கள் பறந்தாலும் பாட காத்திருப்பேன்
உடல் உறைந்தாலும் உறவாட காத்திருப்பேன்

உயிரை இழக்காமல் இருந்தால்...

நித்யா.....

இந்தியா டுடே



இந்தியா  டுடே 
அன்னியர் ஆதிக்கத்தை அங்குலம் அளவும்
அன்னை பூமியில் தோன்றிட விடோம்
                                           -------------தேச பாதுகாவலர்கள்
அன்னியர் ஆதிக்கத்தை அங்குலம் அங்குலமாக
அன்னை பூமியில் தோன்றிட விடுவோம்
                                           -------------தேச துரோகிகள் .

                              ......பிரேம் குமார்

Sunday, November 14, 2010

அடடே



அடடே 
அன்னையும் பிதாவும்
'முன் எரி' தெய்வம் !
முதியோர் இல்லத்தில் !

ராம சந்திரன் ...

Saturday, November 13, 2010

வலி



வலி
காதலிப்பது 
யாராக இருந்தாலும் 
கஷ்டபடுவது 
நான் மட்டுமே..
"இதயம்"

மின் அஞ்சல் வழியாக ....யாமினி பிரியா

புகைப்படம்



புகைப்படம் 
அன்றுதான் எனக்கும் 
மணி பர்ஸ் 
வாங்கும் ஆசையே 
வந்தது ..
பணம் கிடைத்ததால் ..
அல்ல ...

அவளின் புகைப்படம் 
கிடைத்ததால் .. .. ..

தமிழ் பீட் ...

மழை



மழை
தென்றலின்
தீண்டலால்
மேகம் என்ற
குழந்தை

"மழை"

தமிழ் பீட்

மின்னல்



மின்னல் 
நேற்று
பெய்த  மழையில்
குடை பிடித்து வந்த
அந்த மின்னலால்
பறிபோனது
என் பார்வை அல்ல....

என் மனது ..

தமிழ் பீட்

போட்டி



போட்டி 
அவள்  பின்னால் 
போகும்போது தெரியவில்லை
இவ்வளவு சீக்கிரம் 
அவளுக்கு 
முன்னால் போவேன் என்று ....

"கல்லறைக்கு" 

தமிழ்  பீட்  

வாசல் இல்லா வீடு

வாசல்   இல்லா  வீடு 

அசந்து  தூங்கும்  காலையில் கடன்  காரனாய் கதிரவன்  வீசும்
இன்னிசை  தாலாட்டாய்  பேருந்தின்  இசை
கண்ணீரை  துடைத்து  செல்லும்  மழை சாரலில்  கரைகிறோம்
என்று  வரும் என்  வீட்டிற்கு  வாசல்  படிகள் ......

மின் அஞ்சல் வழியாக .........சுகன்யா

Friday, November 12, 2010

இடிதாங்கி

இடிதாங்கியாக இல்லா  விட்டாலும்  சுமைதாங்கி  ஆகிறேன் ..
உன்னால்  ,உன்  நினைவுகளை சுமப்பதினால் ...
விழி  மூடி  தூங்கும்  நேரத்திலும்  விழி  முன்னே நினைவாய்  நிற்கின்றாய்
விழி  திறந்து  காத்து    இருப்பேன்  என்  வாசலில்
உன்  பாத  சுவடுகள்  படியும்  நாளை  எதிர்நோக்கி .......!

                                   -சுகன்யா மின் அஞ்சல் வழியாக .

Thursday, November 11, 2010

என்னவள்


என்னவள் 
என்  நுனி  மூக்கு  கோபம்  கூட
என்னவளின்  ஒரு  நொடி சிரிப்பில்  மறையும் 
அவள்  விழி  ஓர  கசிவை  துடைக்க  என்  விரல்  நுனி  என்றும் ஏங்கும் ...!    
-Dedicated to mom...........

மின் அஞ்சல் வழியாக சுகன்யா .

Wednesday, November 10, 2010

காணவில்லை

காணவில்லை
என்  வீட்டு  முற்றத்தில்  சிதரிகிடக்கும்
அரிசிபருகைகளை  அழகாய்  கொத்திதின்னவரும்   
குருவிக்  கூட்டங்களை  காணவில்லை
கண்டுபிடுத்துத்  தாருங்கள்
குருவிகளோடு  தொலைந்துபோன 
அந்த  அழகிய  காட்சியை ....!

----மகாராஜா மின் அஞ்சல் வழியாக .

உளி

நாம் பெரும் "வலி"கள்...
நம்மை மேம்பட்ட மனிதனாக்க..
"உளி"யாக மாறிச் சிறம்பட செதுக்கவே..
படைக்கப் பட்ட ஒன்று...

--முருகவேல் மின் அஞ்சல் வழியாக   

காதலின் நிறம்

காதலின் நிறம் 
காதலுக்கு 
கற்பனைகள் 
அழகு ..!

ஆனால்

கற்பனையில் 
மட்டும்தான் 
காதல் அழகு .....!!

தமிழ் நெட் 

மாற்றம்

மாற்றம்
வலிக்கின்ற  இதயமும் 
வடிகின்ற கண்ணீரும் 
நிச்சயம் ஒரு நாள் மாறும் 

உண்மையான காதலும் 
உறுதியான நம்பிக்கையும் 
இருந்தால் ...

தமிழன்   

திருடர்கள் ஜாக்கிரதை

திருடர்கள்  ஜாக்கிரதை 
கோவில் திருவிழாவில்
அறிவிப்பு செய்தார்கள் 
கேட்டுகொண்டே தொலைத்தேன் 
என் இதயத்தை 
அவளிடம் ....  

தமிழன் 

நிஜம்

நிஜம் 
பகல் வேலையெல்லாம் உன் 
நினைவில் போனது
 
இரவெல்லாம் 
உன் கனவிலே போகிறது ..!
காதல்...!!

மொய்தீன்  

ஏக்கம்

ஏக்கம் 
அதட்டுகிறார் 
முதலாளி ...

அவசர அவசரமாய் 
மணப்பெண்ணிற்கு 
மாலை கட்டுகிறாள் 

முதிர்கன்னி !

சே. பாக்கியராஜ்  

வேதனை

வேதனை 
தனி மரங்கள் 
தோப்பாகின...
முதியோர் இல்லம் ! 

நெல்லை  கணேஷ்  

நிலவின் வயது

நிலவின் வயது 
சூரியனின் 
வயது 
என்னவென்று 
தெரியாது...
ஆனால்
நிலவின் 
வயது தெரியும்...
பதினாறு!
அவள் தானே 
என் நிலவு..

மூர்த்தி ... 

கவலை

கவலை 
பார்வை அம்புகள் 
எத்தனை பட்டதோ ...

இத்தனை பருக்கள் 
உன் முகத்தில் !..

தென்றல் ஆறுமுகம் ,மின் அஞ்சல் வழியாக   

Sunday, November 7, 2010

தொட்டில் மரங்கள்

தொட்டில் மரங்கள் 

*ஆங்கிலத்தில் திட்டுகிறார் 
ஆசிரியர் 
வகுப்பறைச் சுவற்றில் 
"இனிய உளவாக 
இன்னாத கூறல்"

* ஆங்கிலம் படித்தால் தான் 
அறிவு வளரும் என்கிறீர்கள் 
தமிழ் படித்த 
கலாமை மட்டும் 
தலைவர் என்கிறீர்கள் 

*கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள் 
எங்களையும் 
கொஞ்ச 
நேரம் ஒதுக்குங்கள்....
இப்படிக்கு இன்றைய குழந்தைகள் 

*எங்களுக்காக
 குழந்தைகள் காப்பகம்
 இன்று. 
உங்களுக்காக
முதியோர் காப்பகம்
 நாளை.

     
         ...............சே .ப.வீரதிருக்குமரன் 

Monday, November 1, 2010

காதல் வலை

காதல்  வலை 
கண்களால் வலை விரித்தாய் 
புன்னகையால் சிறை பிடித்தாய்
குற்றங்கள் செய்தது நீ 
தண்டனை மட்டும் எனக்கு !
உன் இதய சிறையில் 
ஆயுள் கைதியாய் நான்...!

கிருத்திகா 

உழைப்பு

உழைப்பு 

வெயிலில் அலைந்து திரிந்து 
கருவாடாய் ஆனாலும் 
கூவி விற்கிறாள் 
மீனை...!

ஜெனிபிர் ..சென்னை  

அப்படியா

அப்படியா

நல்ல காலம் எப்போ வரும் ..
ஏக்கத்துடன் குடுகுடுப்பைக்கரர் !

சாமி நாதன்...

உள்ளம்


உள்ளம் 
உள்ளம்  என்னும்  வெற்றிடத்தை


 உன்  நினைவுகள்  கொண்டு  நிரப்ப  முயேன்றேன்
அது  சுனாமியாய்  மாறியது ஏனோ ? 

- என்  கோவகார காதலியே  ...!

தாமஸ்

Sunday, October 31, 2010

நினைவுகள்

நினைவுகள்


உன் உதடுகள் பேசமறந்த
வார்த்தைகளை உன் நினைவுகள்
பேசிவிடுகிறது என் நெஞ்யோடு ..........!

ச .சூட்டி

பேசும் கண்கள்

பேசும் கண்கள்


கவிதை பேசும் கண்கள்...!
காதல் பேசும் புருவம்....!
எதுவும் பேசாத உதடு......!
_இருந்தும்
எல்லாம் பேசிவிடும் உன் மௌனம் ......!

சூட்டி 

தொலைபேசி

தொலைபேசி


அன்பானவனே ....!
நீ அறிவாயா ....?
உன் கரங்களால் எடுக்கும்
வரை கதறும் உன் தொலைபேசி
ஒலியைப்போல.......................
என் இதயமும் இங்கே
கதறுவதை .........!

ச .சூட்டி

தாடி


தாடி


பெண்ணே....!
உள்ளத்தை நேசித்தால்
உறவுகள் வளரும் என்றார்கள் ......
நானும் உன்னை நேசித்தேன் .....
எனக்கும் வளர்கிறது ..
உன் உறவுகள் அல்ல....!
உன் நினைவாக தாடி ...............!


சூட்டி 

Friday, October 29, 2010

காதல் விஞ்ஞானி

காதல் விஞ்ஞானி 

அன்பே ...
நம் காதலைப்  பொறுத்தவரை 
நான் ஒரு விஞ்ஞானி தான் !

உன் மனதின் ஆழத்தை 
அறிந்து கொள்ள
இடை விடாமல் 
முயற்சிககுரேனே..!

சுரேஷ் குமார் ...பரம குடி..

அகிம்சை

அகிம்சை 
"மகாத்மாவின் கொள்கை என்ன?"
கேள்விக்கு விடை தெரியாத மாணவனை 
பிரம்பால் அடித்து விட்டு 
விடை சொன்னார் ஆசிரியர்
 "அகிம்சை" 

கிருஷ்ணன்...வட சேரி ..

அடடா

அடடா ...
வெண்ணிலவின் மேல்
 பனித்துளி 

என்னவளின் முகத்தில் 
வியர்வை ..

உமா மகேஸ்வரி ....புது கோட்டை 

நினைவுகள் 2

நினைவுகள் 2

உன்னை மறந்து என்
விழிகள் தூங்கினாலும் ..........

என் இதயம் விடுவதில்லை ......
நான் விழிக்கும் முன்பே
உன் நினைவுகளை எழுப்பிவிடுகிறது............!

ச.சூட்டி

தனிமை


தனிமை

தனிமையில் நான் உன்னை நினைக்க
விரும்பவில்லை.... !

உன்னை நினைப்பதற்காகவே தனிமையை
நான் விரும்புகிறேன் ......................!

-ச .சூட்டி

நினைவுகள்

நினைவுகள்


உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது .......

நீ பேசாமலே உன்
நினைவுகளை என்னோடு பேசவைக்க......!

ச .சூட்டி

தடைகளில்லை

தடைகளில்லை


அன்பே ....!
என் காதலில் முத்தங்களின்
ஈரமில்லை.......!

மூச்சுக்காற்றின் வெப்பமில்லை .....!
தொட்டுக்கொள்ள அருகிலில்லை .......!
உனக்கு நெருங்கிவர நேரமில்லை .......!

-அதனால்
விலகிச்செல்ல தேவையில்லை .....!
இருந்தாலும் நெருங்கிவிட்டேன் ......
நினைவுகளுக்கு தடைகளில்லை .....! -

ச.சூட்டி...மின் அஞ்சல் வழியாக  

கரு

கரு 
என்  காதலுக்கு  மட்டுமல்ல
 என்  கவிதைக்கும்  

நீ தான்  கரு ....என்பதால் 

என்  கவிதைகளில்  
என்  காதலும்  சற்று  கசிந்தது .

மின் அஞ்சல் வழியாக ...லதா கிருஷ்ணா 8870707094 jpt

பெண் குழந்தை


பெண் குழந்தை

இரவு அம்மாவுக்கு
பிடித்திருந்தது .......!

உறவு அப்பாவுக்கு
பிடித்திருந்தது ..........!

இரண்டுக்கும் இடையில் உருவான
என்னை மட்டும் .......... ஏனோ ....
இருவருக்கும் பிடிக்கவில்லை.......!

மின் அஞ்சல் வழியாக  -ச.சூட்டி

Tuesday, October 26, 2010

முன்னுக்கு பின் முரணாக

முன்னுக்கு பின் முரணாக 
தமிழன் 
புரியாத மொழி பேசுபவனை 
குருவாக பார்க்கிறான்
சரியாகத் தமிழ் பேசுபவனைக்
குறு குருவெனப் பார்க்கிறான் 

காற்றாடி ,கட்டில்,சோறு என்றால்
நகைக்கிறான் 
திக்கு ,திங்கள்,ஆழி என்றால் 
புரியாமல் 
திகைக்கிறான் 

உண்மை தானே 

அவனைப் பொறுத்தவரை 
மம்மி டாடி 
அங்கிள்  ஆன்டி என்று 
பேசுவது கண்ணியம் 

அப்பா அம்மா 
அத்தை மாமா 
சொற்கள் அன்னியம்!


புதுவை பிரபா ..தஞ்சை   

Sunday, October 24, 2010

அவளுடன் பயணம்


அவளுடன் பயணம்  
தனிமையான  என்  பயணத்தில் 

நிழலாய் அவள்  நினைவுகள் .


கிருஷ்ணா  

Wednesday, October 6, 2010

கண்ணீர் கடல்

கண்ணீர்  கடல்  
என்னவளே
உனக்காக கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்து நீராடிப்போ !!

அஜ்மீர் அலி
அய்யம்பேட்டை (தஞ்சை)

காதல் பிம்பம்

காதல் பிம்பம்
அடி பெண்ணே!
என் இதயம் ஒரு நாள் இரண்டாக உடையும்
அங்கு வந்து பார்
உன் பின்பம் தெரியும் !!!
 
 
அஜ்மீர் அலி
அய்யம்பேட்டை (தஞ்சை)

Thursday, September 30, 2010

சுவாசம்

சுவாசம்
சுவாசிக்க  காற்றே இல்லை
என்றாலும்
நான் உயிர் வாழ்வேன்  
நேசிக்க
நீ
இருக்கும் வரை
 
கென்னடி,மின் அஞ்சல் வழியாக  

வானத்து நிலவு

வானத்து நிலவு
அந்த  நிலவை  போல்  
நீயும்  தூரத்து  நிலவுதான்  
என  தெரிந்த  போதிலும்
என்  வீட்டு  முற்றத்தில்  நான்  அமர்ந்து
அந்த  நிலவையே  பார்த்துக்கொண்டிருப்பேன்
எந்தன்  இதய  வீணையில்
உன்  நினைவுகளை  மீட்டிக்கொண்டு ...
சிட்டு ,மின் அஞ்சல் வழியாக

"கோமா" காதல்

"கோமா" காதல்
என்னவளே
உன்னை  நினைத்து  நான்
என்னை  மறந்தேன்
ஆனால் 
 
 நீ
என்னை  மறந்து
யாருடன்  காதல்
கொள்கிறாய்
.
சாந்தன் மின் அஞ்சல் வழியாக

Wednesday, September 29, 2010

பாடும் கொலுசு

பாடும் கொலுசு
நீ  நடந்துவரும்  அழகை
ஒரு  கவிதையை  சொல்வதற்குள்
நூறு  பாடல்களை  பாடிவிட்டது
உன்  கால்கொலுசு ...

சுரேஷ்,...டெல்லி.

காதல் கொலுசு

காதல் கொலுசு
அவள்
கொலுசு  சத்தத்தோடு
நடக்கும் போது
சத்தமில்லாமல்  
கூடவே  
நடக்கிறது
என் 
  காதல் ...
 
 
ரவி ..மின் அஞ்சல் வழியாக..

Friday, September 3, 2010

மழை

மழை
நீ குடை பிடித்து
நடப்பதை பார்த்து
மழை.......
கண்ணீருடன் சொன்னது
.
.
"பயபுள்ள இப்ப கூட
குளிக்க மாட்டேங்குது பாரு..!
 
சுபாஷ்..சேலம்

விபத்து

விபத்து
நீ
நடந்து செல்லும் போது
மட்டும் அல்ல
என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
 நடந்து விடுகிறது
காதல் விபத்து !
 
தமிழ் மணி ,ஆக்ரா

புகார்

புகார்
எங்கே புகார் செய்வது ?
தொலைந்து போனது
 
என் இதயம் ....
 
பூஜா ...மின் அஞ்சல் வழியாக

Thursday, September 2, 2010

காதலியின் கோலம்

காதலியின் கோலம்
காற்றே
 மெல்ல  வீசு  
கலைத்து  விடாதே  
..
..
என்  காதலியின்  
கோலத்தை .... 
 
ராஜேஷ் ,புது கோட்டை

பிறப்பு

பிறப்பு
ராகங்கள்  ஒன்று  கூடி 
 உருவாக்கின ....
.
.
ஒரு  புல்லாங்குழலை
 
 
மின் அஞ்சல் வழியாக ..நாகராஜ்

Tuesday, August 24, 2010

கவிதை நடை

கவிதை நடை
நீ  நடந்துவரும்  அழகை 

 ஒரு  கவிதையாய் 
 
 சொல்வதற்குள்

நூறு  பாடல்களை  பாடிவிட்டது

உன் கால் கொலுசு ....
 
 
மின் அஞ்சல் வழியாக,,,,,, சுரேஷ்

Tuesday, August 17, 2010

உனக்காக

உனக்காக

எடுத்து
சூடிக்கொள்
உன்
நினைவுகளால்
பூத்து  கிடக்கும்
என்  மனதை ...
 
மின் அஞ்சல் வழியாக ...  செல்வா

அடடா

அடடா  
 
பூக்காமலும்
உதிராமலும் ...
அரும்பாக  மட்டுமே
அழகாக  
இருக்கிறதே  .!
உன்  
மௌன  உதடுகள் ...!
 
 
ரவி சந்திரன்,,மின் அஞ்சல் வழியாக
 

காதல் தோல்வி

காதல்  தோல்வி

என்னை  நீ
ஏமாற்றியது
உனக்கேன்னவோ
சாதாரணம்
 

என்  நெஞ்சிலோ
சதா "ரணம்"
 
மின் அஞ்சல் வழியாக, பெரிய சாமீ

கேள்வி

கேள்வி  
 
வாழ்கையில்  ஒரு  பாதி 
 கற்றலில் கழிந்தது !

மறு  பாதி 
 தேடலில்  கழியப்போகிறது !

மீதம்  எங்கே  இருக்கிறது  வாழ்வதற்கு ...?
 
ரபீக் ,புளியங்குடி மின் அஞ்சல் வழியாக

பாவ மன்னிப்பு

பாவ  மன்னிப்பு

நேற்று  என்  கைகளை  
முட்களால் ...
காயப்படுத்திய  ரோஜா
இன்று  
கண்ணீர்  விட்டு  
அழுகிறது ...!

பனித்துளியாய் !!
 
மின்  அஞ்சல் வழியாக ....கோபி ,சென்னை 

Wednesday, August 11, 2010

காதல் யாத்திரை

காதல் யாத்திரை
அவள் 
கொலுசு  சத்தத்தோடு
நடக்கும்  போது
சத்தமில்லாமல்  
கூடவே  
நடக்கிறது
..
..
என்  
காதல் ...
 
மின் அஞ்சல் வழியாக ,,,ரவி

Tuesday, August 10, 2010

உன்னுள் தொலைந்தேன்

உன்னுள் தொலைந்தேன்
எப்படியோ
தேடி  தேடி
கண்டுபிடித்துவிட்டேன்
என்னை ...!
 
மறுபடியும்
அவளிடம்
மட்டும்  
தொலைக்க ...
 
ரவி , மின் அஞ்சல் வழியாக

Wednesday, August 4, 2010

கண் மை

கண்  மை  
என்னை  கொல்வதற்கு
 உன்  விழிகள்
 ஒன்றே  போதுமே  
 
பின்  
அதில்  ஏன்  
விஷம்  வேறு  தடவுகிறாய்....?
 
முத்து,சாத்தான் குளம்
 

நில நடுக்கம்

நில  நடுக்கம்  
விண்ணை  நோக்கி
விதவிதமான
அடுக்கு  மாடி  வீடுகள் !
 
சுமை  தாங்காமல் 
சுளுக்கு  விழுந்தது 
 
பூமிக்கு .... 
 
சரவணன் மயிலாடுதுறை

ஆட்டம்

ஆட்டம்
வாலை ஓட்ட  அறுத்தும் 
 ஆட்டம்  போடுகிறது 
 வானத்தில்  
பட்டம்!
  
கமால், ராய பேட்டை

அடடே

அடடே 
முட்கள் இருந்தும் 
கவலை இல்லாத பயணம் ..
 
"கடிகாரம்"
  
ஷண்முக குமார்  ....  திருச்சி  

ENNUL NEE

என்னுள் (நீ)
நீ
என்னிடம்  
எதை  வேண்டுமானாலும்  
கேள் ..
 
என்னுள்  
இருக்கும் 
 உன்னைத்தவிர ....
 
செந்தில் ..,ஊட்டி  

MUTHAR KATHAL

முதற்காதல்
சஹாராவில்  சிந்திய
முதல்  பனித்துளியை  விட
தன்மையானது  ........

என்னவன்  சுவாசம்
சுமக்கும்  காற்றின்  தீண்டல் ...

இரவு  வானில்
வரும்  நிலவை  விட
ஒளியானது ....

புன்னகை  சிந்தும்
இதழ்களின்  முகம் .........

கம்பன்  செல்லி
கவிதைகளை  விட
இனிமையானது ........

உறங்கும்  பொழுதில்
உலரும்  சொற்கள் ............

வேரின்  நுனி  செல்லும்
நீர்த்துளியை  விட
ஆழமானது ......

நானும்  உன்னோடு
நாளும்  உன்  நினைவோடு .....
 
அருணா.. 

OVIYAM

ஓவியம்
சுத்தம்  செய்ய  மனம்  வரவில்லை
ஓவியமாய்  இருக்கிறது 
 ஒட்டடை .....
 
மின் அஞ்சல் வழியாக ....மீரா  

Sunday, July 4, 2010

நீச்சல் குளத்துச் சிறுமி

நீச்சல்  குளத்துச் சிறுமி
 
தவறிப்போன  
ஆற்றின்  பேரழகை  

புறக்கணிகப்பட்ட
கிணற்றின்  சுடர்மிகு  ஆழத்தை  

மறுக்கப்பட்ட
குளத்தின்  பெரும்  அமைதியாய்

தேடித்தேடி  நீந்துகிறாள்

சுற்றுலாத்  தளத்தின்
செயற்கை  நீச்சல்  தொட்டியில்  

 சிறகுகளை குறுக்கிய  படி

சிறுமி ஒருத்தி ..
 
-----------க .அம்சப்  பிரியா ,மின் அஞ்சல் வழியாக .... 

BOOMI

பூமி
 
நாம்  நம்  முன்னோர்களிடம்  இருந்து 
 
  பூமியை
 
கடனாக  பெற்று  இருக்கிறோம்....
 
 
 
அனுபவிக்க  முழு  உரிமை   உண்டு
 
அழிக்க  துளி  கூட  உரிமை  இல்லை ...
 
                   மின் அஞ்சல் வழியாக ....பசுமை தாசன்

DHAANAM

தானம்
 
முல்லைக்கு  தேர்  கொடுத்தானாம்
  பாரி  மன்னன்
 
அவனுக்கென்ன  
 
அது  மக்களின்  வரிப்பணம்  தானே........
 
-------------மு. கண்ணதாசன் ,மின் அஞ்சல் வழியாக

Tuesday, June 8, 2010

YUGA MATTRAM

யுக மாற்றம்
நிதான  யுகத்தில் 
அவசரமாய் 
பிள்ளைகள் பெற்றார்கள்...
 
 
அவசர யுகத்தில் 
நிதானமாய் 
பிள்ளை பெறுகிறார்கள் !
 
---------  கே ஜி  ராஜேந்திர  பாபு ,மின் அஞ்சல் மூலமாக .....

MARAM

மரம் 
மரம் வெட்டிய பின்
மரத்தை தேடினான் 
.
.
நிழலுக்காக ...  
 
               மின் அஞ்சல் வழியாக .....மினி

VETKAM

வெட்கம்
சூரியன் வந்தும்
மறையாத  நிலவாய்
நான்....
 
என்  வெட்கங்கள்
உன்னை  பார்த்த  பிறகும் ...!
 
         ----------அருணா ,மின் அஞ்சல் வழியாக

KAATHAL

காதல்
பிறக்க காரணமும்  காதல்  தான் ..
இறக்க  காரணமும்  காதல்  தான் ...
.
.
இரு  மனிதன்  கொண்ட  காதலில்  பிறக்கிறோம் ..
மனிதன்  மீது 
காலம்  கொண்ட  காதலில்  இறக்கிறோம் ..!
 
------அருணா ,மின் அஞ்சல் வழியாக

Monday, May 24, 2010

DHAANAM

தானம்
 
முல்லைக்கு  தேர்  கொடுத்தானாம்  பாரி
அவனுக்கென்ன .......
.
.
 
அது  மக்களின்  வரிப்பணம்  தானே ..
 
                       -------மு கண்ணதாசன் ,மின் அஞ்சல் வழியாக

Saturday, May 22, 2010

MANITHARGAL

மனிதர்கள்
 
கோடிக்கணக்கான
மைல்கள் தூரத்திற்கு அப்பால்
சுழன்று
உலவ்க்கொண்டிருக்கும்
ஒவ்வொரு கிரகங்களின்
பெயர்களை
கிழமைகளுக்கு வைத்த
மனிதன்
 
மனிதர்கள் வாழும்
பூமியின் பெயரில்
ஒரு கிழமைக்கும்
பெயர் வைக்கவில்லை
.
.
மனிதன்
மனிதர்களை
மதிப்பதில்லை ....
 
மின் அஞ்சல் வழியாக ..நா.முத்து கிருஷ்ணன்

Friday, May 21, 2010

pen

பெண்
மண்ணில் பெண்களுக்கு பஞ்சமில்லை
 
ஆனால்
 
உன்னைப்போல் யாருமில்லை....
 
                  ------------ராஜா ...

Friday, May 14, 2010

PACHAI UNMAI


நெத்தி அடி வரிகள் ;
 
பச்சை உண்மை
 
 உண்மையான  அன்பிற்கு  ஏமாற்ற  தெரியாது ..
ஏமாற மட்டுமே  தெரியும் ....
 
---------கோவை தமிழன் ,மின் அஞ்சல் வழியாக

VAERUPAADU

வேறுபாடு
 
இரண்டு  மலர்கள்  பேசிகொன்டன ...
 
ஒரு  செடியில்  தானே  ஒன்றாக  மலர்ந்தோம் !
 
பின்பு  உனக்கு  மணவறை
 
 எனக்கு  ஏன்  கல்லறை ..?
 
 
மின் அஞ்சல் வழியாக ,,கோவை தமிழன்

OOR PECHU

ஊர் பேச்சு

போராடும்  வரை  வீண்  முயற்சி  என்பார்கள் ...
வெற்றி  பெற்ற  உடன்  விடா  முயற்சி  என்பார்கள் 
 
           மின் அஞ்சல் வழியாக ----கோவை _தமிழன் 
 

Thursday, May 13, 2010

ARASIN SAATHANAIKAL?

அரசின் சாதனைகள் ?? 
 
புதிதாய்  கட்டப்பட்ட  பாலங்களும்
வெட்டி  விரிவாகபட்ட  சாலைகளும்
நினைவூட்டின  
.
.
 
அரசின்  சாதனைகளை   அல்ல..
 .
.

அங்கிருந்து  அகற்றப்பட்ட  பசுமையான மரங்களை ........
 
 
                       -----------மகாராஜா  ,,மின் அஞ்சல் வழியாக .....

ETHIR KAALAM

எதிர் காலம்
 
நீ  என்னை  கடந்து  செல்லும்  பொது
என்மேல்  வீசிய  பார்வைகள்  தான்
உறுதி  செய்தன,
.
.
.
எனக்கும்  எதிர்காலம்  உண்டென்பதை .........
 
-----------மகாராஜா ,மின் அஞ்சல் வழியாக ..........
 
                             

PADHA SUVADUKAL

தமிழ்  ஹைக்கூ  SMS கவிதை

மற்றவர்கள்  சென்ற  பாதையில்  நீங்களும்  செல்லாதீர்கள் …

உங்களின்  பாத  சுவடுகள் 
 
 தெரியாமல்  போய்விடும் ......
 
               -----மெர்வின் ,மின் அஞ்சல் வழியாக  

IDAYAM

இதயம்
 
பேருந்து  நெரிசலில்  அவள்  நசுக்கீயது,
 என்  இதயத்தை ...           
                 --------s.சரவணன்   மின் அஞ்சல் வழியாக

Friday, April 30, 2010

THUYARAM

துயரம்
 
துபாய்!
 
வெளியில் இருப்பவனுக்கு
வாழ்நாள் கனவு...
 
உள்ளே இருப்பவனுக்கு
வாழ்நாளே
கனவு....
       
          ----இசாக் .மின் அஞ்சல் வழியாக ....திருச்சி

Saturday, April 24, 2010

KATHAL

 
காதல்  ஹைக்கூ

ஊரே  நம்  காதலை  பற்றி  பேச ,
நாம்  மட்டும்  அமைதியாய்,
கல்லறையில் ...  
                                    ராகவி ,singapore
 
 

Friday, April 23, 2010

SATHANAI


சாதனை  ஹைக்கூ  SMS
"மலையை " பார்த்து  " மலைத்து  விடாதே ,
மலை  மீது  ஏறினால்  அதுவும்
உன்  "கால்  அடியில் ".தான்
 
 
     ------மின் அஞ்சல் வழியாக ,ராஜா

Wednesday, April 21, 2010

SANGILI


சங்கிலி :
கழுத்துக்கு  ஏனடி !?
உன்  மனதிற்கு  போடு
இப்படிக்கு  வறுமை  கணவன்
                              
 

 

SIRAI

சிறை
 
நீ   அணைத்தபோது  சிறகுகல்லில்  என்னை  அன்னைததுபோல்   இருந்தது ..!

அவளுக்கு  மட்டும்  தான்  தெரியும்  அது  சிறகுகள்  அல்ல  சிறை   என்று
......!
    தாமஸ் ,மின் அஞ்சல் வழியாக ...

Monday, April 19, 2010

KANNEER


சிலருக்கு  பனி  துளி  புடிக்கும் ,
சிலருக்கு  மழை  துளி  புடிக்கும்
ஆனால் , யாரையாவது  உண்மையாக  'நேசித்து ' பாருங்கள் ..
கண்ணீர்   துளி  கூட  பிடிக்கும்  

Friday, April 16, 2010

KATHALI

ரொமாண்டிக்  தமிழ்  கவிதை  ஹைக்கூ
காதலி
காற்றில்  கூட அவள்  இருக்கிறாள்  என்பதை  உணர்தேன் ..!
தூசியாய்  வந்து 
 என்  கண்ணை  கலங்க  வாய்த்த   பொது  ......


Share Orkut

MALAR


தத்துவம்  ஹைக்கூ  
 
மலர்
 
உதிர்ந்த  பூக்களுக்காக  கண்ணீர்  விடாதே .
மலர்கின்ற  பூக்களுக்கு  தண்ணீர்  விடு ...

MUTHAL SATHAMILLAMAL

நகைப்பு  தமிழ்  ஹைக்கூ
 
முத்தம் ...சத்தமில்லாமல்

அனுமதி  கேட்கவும்  இல்லை ...
அனுமதி  வழங்கவும்  இல்லை ...
ஆனால்  பிடிவாதமாக  ஒரு  முத்தம் ...
"கன்னத்தில்  கொசு  கடி "!
                       -----மகாராஜா ,

KALLARAI


சிந்தனையை தூண்டும் தமிழ்  ஹைக்கூ
 
கல்லறை

சவப்பெட்டி  அழுகிறது ,
இறந்தது  மனிதன்  தானே ..?

என்னை  ஏன்  புதைகிரீர்கள்  என்று ... 
                  மின் அஞ்சல் வழியாக ,மேர்வின்

ROMANCE

ரொமாண்டிக்  தமிழ்  ஹைக்கூ
உன்னை  சந்திக்கம்மல்  இறுக்க முடியும்
ஆனால்
 
 உன்னை  சிந்திகம்மல்  இறுக்க  முடியாது  
          ----மின் அஞ்சல் வழியாக ,லாரா

yathaarthem

யதார்தம்
 
பேருந்து  பயணத்தில்
இயற்கை  அழகை ரசிக்க  முடியவில்லை ;

நடத்துனரின்  சில்லறை  பாக்கி !!!
 
        -----ராகவி ,மின் அஞ்சல் வழியாக

THUDIPPU

துடிப்பு  ஹைக்கூ

இடி  இடிப்பது  மழைக்காக ,
ஆனால்  என்  இதயம்  துடிப்பது  உனக்காக .     
             -----------ராகவி .,மின் அஞ்சல் வழியாக  

KATHAL SINNAM

 
காதல் சின்னம்
 
அவனும்  இல்லை ,
அவளும்  இல்லை .
யாருக்காக  நிற்கிறது  காதல்  காவியமாய் ?
தாஜ்  மஹால் ...

                ----மின் அஞ்சல் வழியாக  P.சதீஷ்  குமார் 

vaalkai


வாழ்க்கை

பசியோடு   
அன்னதான போஸ்டர்ரை ஓட்டினான்...
 
  தெருஓர  சிறுவன் .
                -----Submitted by கவிதைகுப்பன் 
 
 

Thursday, April 15, 2010

nanbaa

 
நண்பா
 
பூவிற்கு  வாசம் ,
எனக்கு  நீ  சுவாசம் .       
                     ---மின் அஞ்சல் வழியாக A.ஸ்ரீனிவாசன்
 
 

Tuesday, April 13, 2010

punnagai

செடியில் பூக்கும் மலரை விட
ஒரு நொடியில் பூக்கும் புன்னகை தான் அழகு
 
மின் அஞ்சல் வழியாக  சேவியர் ...

VAARTHAIGALUKKU APPAAL

வார்த்தைகளுக்கு அப்பால் ...

ஆயிரமாயிரம்
ஆறுதல் வார்த்தைகளும்
அளிக்க முடியாத ஒன்றை
அளித்து செல்கிறது
துக்க வீட்டை  சுற்றி
 துள்ளலாட்டம் போட்டு
கல கல சிரிப்புடன்
வளம் வரும் மழலை...

Wednesday, April 7, 2010

MARANGAL.....MARANAM!

மரங்கள் ......மரணம் !

தோளுக்கு மேல்
வளர்ந்தவனை
கையால் அடிப்பதே
தவறு...

கோடரியால்
வெட்டுகிறார்களே நியாயமா?

கண்ணீர் விடும்
மரங்கள்!

               ----------கோ.செந்தில்,மின் அஞ்சல் வழியாக

VALI

வலி

அதெப்படி இறக்கமலேயே
மரண வலி?
என் பக்கம் திரும்பாமல்
செல்கிறாளே காதலி...!

                     -----------வரதராஜ்,மின் அஞ்சல் வழியாக

PERUNTHU KAATHAL

பேருந்து  காதல்

அழகான தேவதைக்கு...
என்று தான் என்
காதல் கடிதங்களை
துவங்குகிறேன்,

உன் பெயர் தெரியாததால்...!

                            ------செல்வராஜ், மின் அஞ்சல் வழியாக

VETKAM

எந்தப்
பெண்ணிடம்
கற்று கொண்டது
இந்த வெட்கத்தை ...!


தொட்டாசிநிங்கி..

Tuesday, April 6, 2010

MOUNAM


மௌனம்

உன்னிடம்
கற்றுக்கொள்ள
வேண்டியது
நிறைய
இருக்கிறது
உன்
மௌனம்
தவிர...

                  ------ர .ஆனந்தி  ,மின் அஞ்சல் வழியாக

KODAI



 எனக்கு பிடிக்கிற
அத்தனையும்
உனக்குத்
தந்து விட வேண்டும் .
எனக்கு
என்னை பிடிக்கும் ....
                                     ----ர .ஆனந்தி  ,மின் அஞ்சல் வழியாக

PUDIR

  புதிர்

நீ
ஒரு புரியாத புதிர்
புரிந்தவர்கள் சொன்னார்கள் .
சொல்லிவிட்டு போகட்டும்.
புதிர்
எனக்கு பிடிக்கும் !
புரியமலயே...!

                          ------ர .ஆனந்தி  ,மின் அஞ்சல் வழியாக 

Thursday, March 25, 2010

isai kallori


இன்று
"இசை கல்லூரி "
விடுமுறை ...




அவளின் 
கால் "கொலுசு " 
தொலைந்ததால்...

உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]